இன்றைய சூழலில் எந்தத் துறைகள் அதிக வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளன எனக் கூறலாம்? | Kalvimalar - News

இன்றைய சூழலில் எந்தத் துறைகள் அதிக வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளன எனக் கூறலாம்? மே 30,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

குறிப்பிட்ட துறைகள் குறிப்பிட்ட காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளதையும் பின்பு இவை மாறுவதையும் காண்கிறோம். எனினும் கடந்த சில ஆண்டுகளாகவே முன்னணியில் உள்ள துறைகளாக பின்வரும் துறைகள் அடையாளம் காணப்படுகின்றன. ஏர்லைன்ஸ்: இந்தியாவில் மிக வேகமாக வளரும் துறைகளுள் ஒன்றாக ஏர்லைன்ஸ் துறை உள்ளது. தனியார் வேகமாக வளரும் இந்தத் துறையில் 2010க்குள் பைலட்டுகள் மட்டுமே 2000 பேர் தேவைப்படுகின்றனர். இது போக ஏர்லைன்ஸ் தொடர்பான பிற பணிகளுக்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கப் போகிறது. இவை மட்டும் 10 ஆயிரம் காலியிடங்கள் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் பைலட் பணியைத் தவிர பிற பணி வாய்ப்புகள் இவை தான்.
ஏர் டிராபிக் கன்ட்ரோலர்
பயணிகள் மற்றும் கார்கோ விமானங்கள் பராமரிப்பு
ரிசர்வேஷன்
பொது நிர்வாகம்
நிதி வர்த்தகம்
மக்கள் தொடர்பு
ரீடெயில்
வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு சமீபத்தில் திறந்து விடப்பட்டுள்ள இத் துறையில் முதலீடுகள் ஆயிரக்கணக்கான கோடிகளாம். பெரிய ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் காலியாகவிருக்கும் வேலை வாய்ப்புகள் லட்சக்கணக்கில் உள்ளன.

இன்ஜினியங் மனுபாக்சரிங்: ஐ.டி., துறைக்கு அதிக அளவில் இன்ஜினியர்கள் சென்று விடுவதால் உற்பத்திக்கான துறைகளில் இவர்களுக்கான தேவை கடுமையாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு ஐ.டி., துறையில் மட்டும் 50 ஆயிரம் இன்ஜினியர்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இன்ஜினியரிங் திறனுடன் அடிப்படை ஆங்கிலத் திறன் பெற்றவருக்கு பிற துறைகளில் சிவப்பு கம்பள வரவேற்பு அடுத்த சில ஆண்டுகளில் காத்திருக்கிறது.

பாங்கிங் மற்றும் இன்சூரன்ஸ்: வேக வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறை தான் கடந்த 3 ஆண்டுகளில் அதிக நபர்களுக்கு வேலை தரும் துறைகளுள் ஒன்றாக உருவாகியுள்ளது. எம்.பி.ஏ. போன்ற நிதி சார்ந்த படிப்புகள் முடித்தவருக்கு இவை கிடைக்கின்றன.

டெலிகாம்: ஆண்டுக்கு 70 சதவீத அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்தத் துறையில் தேவைப்படும் நபர்களை விட 10 சதவீதம் குறைவாகவே திறன் உள்ளவர்கள் கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் சிறப்பான ஆங்கிலத் திறனும், தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர மேலும் ஒரு மொழி அறிந்திருப்பதும், ஆப்டிடியூட் திறன்கள் பெற்றிருப்பதும் அடுத்த சில ஆண்டுகளில் உங்களை பெரும் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

உணவுத் துறை: புட் பெவரேஜஸ் மேனேஜர், எக்சிகியூடிவ் ஹவுஸ்கீப்பர், ரெஸ்டாரன்ட் மேனேஜர், பிரண்ட் ஆபிஸ், புக் கீப்பிங், ஹவுஸ் கீப்பிங், டயட்டிக்ஸ் போன்ற பல்வேறு பணி வாய்ப்புகளைக் கொண்டிருப்பது உணவுத் துறை. உலகமயமாக்கலால் இந்தியாவின் பொருளாதாரம் வளர வளர இந்தத் துறையும் வளர்ந்து கொண்டே செல்கிறது.

எனவே புரபஷனலாக இதில் படித்திருப்பவருக்கு அடுத்த சில ஆண்டுகளில் பெரும் வரவேற்பு காத்திருக்கிறது. சுற்றுலாத் துறை: டிராவல் ஏஜன்ட், டூர் ஆபரேட்டர், டிராவல் கன்சல்டன்சி, வாகன நிர்வாகம் போன்ற பல்வேறு வாய்ப்புகளை இது கொண்டுள்ளது.

அனிமேஷன்: புவியியல், நானோ டெக்னாலஜி,  மைக்ரோபயாலஜி பயோடெக்னாலஜி மொழிகள்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை வட மாநிலங்களில் கலை இலக்கியப் படிப்புகளுக்கு தற்போது மீண்டும் நல்ல கிராக்கி உள்ளது. உளவியல், ஆடை வடிவமைப்பு, நுண்கலை, அனிமேஷன், சைபர் சட்டம் போன்ற படிப்புகளும் இந்த ஆண்டு முன்னணியில் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us