கல்வி உதவித்தொகை | Kalvimalar - News

கல்வி உதவித்தொகை

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ், பி.எம்.,-யாசஸ்வி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வின் அடிப்படையில், தகுதியான மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.தகுதி:  9ம் மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை விபரம்: தேர்வு செய்யப்படும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.25 லட்சம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.தேர்வு விபரம்: தேசிய தேர்வு முகமை நாடுமுழுவதும் இத்தேர்வை நடத்துகிறது. 150 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 10தேர்வு நாள்: செப்டம்பர் 29விபரங்களுக்கு: http://yet.nta.ac.in Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us