ஆச்சரியம்; ஆனால் உண்மை! | Kalvimalar - News

ஆச்சரியம்; ஆனால் உண்மை!

எழுத்தின் அளவு :

• வெளிப்புறத்தில் விதைகளைக்கொண்ட ஒரே பழம் ஸ்ட்ராபெர்ரி: ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்தில், அதன் தோலில் கிட்டத்தட்ட 200 விதைகள் இருக்குமாம்.

• இறாலில் உள்ள கறுப்புக் கோடு அதன் குடல்களாகும்: நாம் அதை, நரம்பு என்று அழைக்கிறோம். ஆனால், அது உண்மையில் அதன் குடலின் ஒரு பகுதியாகும்

• 7,500க்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகள் உள்ளன: உலகம் முழுவதும், 7,500க்கும் மேற்பட்ட, வெவ்வேறு வகையான ஆப்பிள்கள் காணப்படுகின்றன

• தேன் ஒருபோதும் கெட்டுப் போவதில்லை: பண்டைய எகிப்திய கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட, 3,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தேன் பானைகளில், தேன் கெட்டுப் போகாமல் இருந்துள்ளது.

• சில காளான்கள் இருட்டில் ஒளிரும்: பயோலுமினெசன்ட் (bioluminescent) காளான்கள் என்று அழைக்கப்படும் இந்த மாயாஜால காளான்கள், இருட்டில் பச்சை நிற ஒளியை வெளியிடுகின்றன.

• பாப்கார்ன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது: மெக்ஸிகோவில், 4,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாப்கார்ன் துகள்களை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us