ஈராக் உதவித்தொகை | Kalvimalar - News

ஈராக் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

ஈராக்கிய உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம், ஈராக் பல்கலைக்கழகங்களின் நிதி உதவியுடன், வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவித்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ஈராக் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பை பெறுவர். இந்த உதவித்தொகை திட்டத்தில் இந்திய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.மொத்த உதவித்தொகை எண்ணிக்கை: 6837 இடங்கள் படிப்பு நிலைகள்: அட்வான்ஸ்டு டிப்ளமா, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி., உதவித்தொகை திட்டம்:


முழு உதவித்தொகை மற்றும் சுய நிதிஉதவி ஆகிய இரண்டு பிரிவுகளில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 53 இடங்கள் சுயநிதி உதவு பிரிவிலும், 5 ஆயிரத்து 784 இடங்கள் முழு உதவித்தொகை பிரிவிலும் வழங்கப்படுகிறது. முழு உதவித்தொகை பிரிவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், பல்கலைக்கழகத்தை பொறுத்து பாடப்பிரிவுகள், உதவித்தொகை திட்டம் மாறுபடுகிறது. விரிவான தகவல்களுக்கு உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.பங்குபெறும் பல்கலைக்கழகங்கள்:


பாக்தாத் பல்கலைக்கழகம், பஸ்ரா பல்கலைக்கழகம், மொசூல் பல்கலைக்கழகம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சுலைமானி பல்கலைக்கழகம், பாபிலோன் பல்கலைக்கழகம், திக்ரித் பல்கலைக்கழகம், கூபா பல்கலைக்கழகம், அன்பர் பல்கலைக்கழகம், தியாலா பல்கலைக்கழகம், முஸ்தான்சிரியா பல்கலைக்கழகம், வாசித் பல்கலைக்கழகம், சமரா பல்கலைக்கழகம், சலாஹதீன் பல்கலைக்கழகம், கிர்குக் பல்கலைக்கழகம், அல்-காதிசியா பல்கலைக்கழகம், தி-கார் பல்கலைக்கழகம், அல்-முதன்னா பல்கலைக்கழகம், நினிவே பல்கலைக்கழகம், அல்-நஹ்ரைன் பல்கலைக்கழகம் உட்பட மொத்தம் 47 ஈராக் பல்கலைக்கழகங்கள்.விண்ணப்பிக்கும் முறை: http://studyiniraq.scrdiraq.gov.iq என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.விண்ணபிக்க கடைசி நாள்: ஜூன் 15விபரங்களுக்கு: www.education.gov.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us