நான்கில் ஒன்று சொல் | Kalvimalar - News

நான்கில் ஒன்று சொல்

எழுத்தின் அளவு :

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அவற்றை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. உடல் ஆரோக்கியத்திற்கு, நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தின் பெயர் என்ன?

அ. நடப்போம் நலமுறுவோம்
ஆ. நடப்போம் நலம் பெறுவோம்
இ. இயற்கை நடைப்பயிற்சி
ஈ. ஆரோக்கிய நடை

2. இந்திய முப்படைகளில் பணியாற்றும் அனைத்து நிலை பெண்களுக்கும், எதற்கான சலுகைகளை விரிவுபடுத்தி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் உத்தரவிட்டார்?
அ. மருத்துவம்
ஆ. ஓய்வூதியம்
இ. பேறுகாலம்
ஈ. போக்குவரத்து

3. மேற்குவங்க மாநிலத்தில், இந்திய -- வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தவிர்க்க, எல்லை வேலிகளில் எந்தப் பூச்சியை வளர்க்கும் பணியை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் தொடங்கி உள்ளனர்?
அ. தேனீ
ஆ. கரப்பான்
இ. தட்டான்
ஈ. கம்பளி

4. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும், வாதங்களையும் மாநில மொழிகளுக்குத் தானாக மாற்றும் முயற்சியில், எந்தத் தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி. மேற்கொண்டுள்ளது?
அ. 5ஜி
ஆ. ப்ளாக் செயின்
இ. விர்ச்சுவல் ரியாலிட்டி
ஈ. ஏ.ஐ.

5. மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், புதிய ஆணையராகப் பொறுப்பு ஏற்றுள்ளவர்?
அ. ஹீராலால் சமாரியா
ஆ. ஒய்.கே.சின்ஹா
இ. தினேஷ் மேத்தா
ஈ. சத்ருஹன் குப்தா

6. விலையேற்றத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் பெயர் என்ன?
அ. இந்தியா ஆட்டா
ஆ. தேஷ் ஆட்டா
இ. பாரத் ஆட்டா
ஈ. ஆட்டா பாரத்

7. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் புதிதாகச் சேரும் வீரர்களுக்கு, எந்தத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
அ. ஏ.ஐ.
ஆ. ட்ரோன்
இ. ஹெலிகாப்டர்
ஈ. ரோபோடிக்ஸ்

8. கோவாவில் நடந்த, 37வது தேசிய விளையாட்டு, ஆண்களுக்கான நீச்சல் போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீஹரி நடராஜ், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
அ. ஆந்திரம்
ஆ. தமிழ்நாடு
இ. கேரளம்
ஈ. கர்நாடகம்

விடைகள்:
1. ஆ,
2. இ,
3. அ,
4. ஈ,
5. அ,
6. இ,
7. ஆ,
8. ஈ.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us