தமிழக அரசு அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாமாண்டு டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி: நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமா படிப்புகளில் சேர, 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, உயரியல், இன்பர்மேட்டிக்ஸ் பிராக்டிஸ், பயோடெக்னாலஜி, அக்ரிகல்ச்சர், இன்ஜினியரிங் கிராபிக்ஸ், பிசினஸ் ஸ்டடீஸ் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்றை படித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ., படித்தவர்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpoly.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் டி.என்.இ.ஏ., மாவட்ட சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.