சாம்சங் நடத்தும் போட்டி | Kalvimalar - News

சாம்சங் நடத்தும் போட்டி

எழுத்தின் அளவு :

இளைஞர்களிடையே புத்தாக்க சிந்தனை மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்தும் நோக்கில் சாம்சங் நிறுவனம் சால்வ் பார் டுமாரோ எனும் தலைப்பிலான போட்டியை நடத்துகிறது. 



மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஸ்டார்ட்அப் ஹப், எப்.ஐ.டி.டி., மற்றும் ஐ.ஐ.டி., - டெல்லி ஆகியவற்றுடன் இணைந்து சாம்சங் இந்த போட்டியை நடத்துகிறது.



யார் பங்கேற்கலாம்: 16-22 வயதுக்குட்பட்டவர்கள், தனித்தனியாக அல்லது 3 பேர் கொண்ட அணியாக பங்கேற்கலாம்.



தலைப்புகள்: கல்வி மற்றும் கற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்



பயிற்சி: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி மற்றும் ஐ.ஐ.டி., டில்லியில் நேரடி பயிற்சி வழங்கப்படுகிறது.



பரிசுகள்: வெற்றி பெற்ற 3 அணிகளுக்கு மொத்தம் ரூ.1.5 கோடி மற்றும் சாம்சங் தயாரிப்புகள். மேலும், முதல் 30 மற்றும் முதல் 10 இடங்களை பெறும் இளைஞர்களுக்கு நிகழ்ச்சியின் பல்வேறு கட்டங்களில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 



விண்ணப்பிக்கும் முறை: www.samsung.com/in/solvefortomorrow/login என்ற இணையதளம் வாயிலாக தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31



விபரங்களுக்கு: www.samsung.com/in/solvefortomorrow 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us