தாய்லாந்து உதவித்தொகை | Kalvimalar - News

தாய்லாந்து உதவித்தொகை

எழுத்தின் அளவு :

தனது 80வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள காசெட்சார்ட் பல்கலைக்கழகம், ஸ்ரீராச்சா வளாக உதவித்தொகை திட்டத்தின் கீழ் 6 ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்குகிறது. 
தகுதிகள்: 


* உயர்நிலை பள்ளி இறுதியாண்டு அல்லது அதற்கு இணையான படிப்பு.


* ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, சீனா, கொரியா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு.உதவித்தொகைகளின் எண்ணிக்கை:


இத்திட்டத்தின்கீழ், இளநிலை பட்டப்படிப்பில் 10 பேருக்கும், முதுநிலை பட்டப்படிப்பில் 5 பேருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.உதவித்தொகை காலம்:


இளநிலை பட்டப்படிப்பு: 4 ஆண்டுகள்


முதுநிலை பட்டப்படிப்பு: 2 ஆண்டுகள்


முனைவர் படிப்பு: 3 ஆண்டுகள்உதவித்தொகை விபரம்:


கல்விக்கட்டணம், சர்வதேச மாணவர் கட்டணம், தங்குமிடம் ஆகிய செலவினங்கள் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இவைதவிர, இளநிலை பட்டப்படிப்பிற்கு மாதம் ரூ.24 ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பிற்கு மாதம் ரூ. 29 ஆயிரமும் வழங்கப்படுகிறது. எனினும், பயணச் செலவுகள், விசா கட்டணம், விமான கட்டணம், சுகாதார காப்பீடு, உணவு மற்றும் இதர தனிப்பட்ட செலவுகள் இத்திட்டத்தில் வழங்கப்படுவதில்லை. தேவையான ஆவணங்கள்:


ஆன்லைன் விண்ணப்பப் படிவம், மாணவர் அடையாள அட்டையின் நகல் அல்லது விண்ணப்பதாரரின் கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ், பாஸ்போர்ட் நகல், கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான சான்று, சுகாதார காப்பீடு மற்றும் இதர ஆவணங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 மே 2023விபரங்களுக்கு:  


தொலைபேசி எண்: (66) 383545814, 814260088. 


இ-மெயில்: salisa.y@ku.th


இணையதளம்: www.education.gov.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us