ஐ.பி., எனப்படும் நமது உளவுப் பிரிவில் இன்டலிஜென்ஸ் ஆபிசராக பணியாற்ற விரும்புகிறேன். இப்பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ஐ.பி., எனப்படும் நமது உளவுப் பிரிவில் இன்டலிஜென்ஸ் ஆபிசராக பணியாற்ற விரும்புகிறேன். இப்பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறவும்.மே 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

நம் இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கும் இத்துறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுவது. பட்டப்படிப்பு தகுதியை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த பணிக்கு 25 வயதுக்குட்பட்டவர் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் முதற்கட்டமாக பரிசீலிக்கப்பட்டு பின்பு தான் போட்டித் தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள்.

பொதுவாக இதில் 2 தாள்கள் இடம் பெறுகின்றன. முதல் தாள் அப்ஜக்டிவ் கேள்விகளைக் கொண்டிருக்கும். இதில் பொது அறிவு, கணிதம் மற்றும் ஆங்கிலப் பகுதிகள் இடம் பெறுகின்றன. 2வது தாளில் விரிவாக விடையளிக்கும் கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல் ஆகியவை இடம் பெறுகின்றன. எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நியமிக்கப்படலாம். தற்போது ஐ.பி., அறிவிக்கவுள்ள இந்தப் பணி வாய்ப்பு பற்றிய தகவல்களை அறிந்து விண்ணப்பிக்க தவறாது நமது இதே பகுதியின் அடுத்த வார இதழைக் காணவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us