இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற விரும்பும் இந்திய மாணவ, மாணவிகளுக்கு இன்லேக்ஸ் சிவ்தாசனி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்: இம்பெரியல் காலேஜ் லண்டன், ராயல் காலேஜ் ஆப் ஆர்ட் - லண்டன், யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ் மற்றும் சயின்சஸ் போ - பாரிஸ் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்பு நிலைகள்: முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., துறைகள்: 


பிசினஸ் மற்றும் பினான்ஸ்


கம்ப்யூட்டர் சயின்ஸ்


இன்ஜினியரிங்


பேஷன் டிசைன்


பிலிம் அண்டு பிலிம் அனிமேஷன்.


ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் டூரிசம்


இந்தியன் ஸ்டடீஸ்


மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்


மெடிசின், டென்டிஸ்ட்ரி மற்றும் அவை சார்ந்த தெரபி படிப்புகள்


மியூசிக் 


பப்ளிக் ஹெல்த், ஆகிய துறை படிப்புகளை தவிர இதர படிப்புகள்.உதவித்தொகை விபரம்: 


கடந்த 1976ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தகுதியும், திறமையும் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம், தங்குமிட செலவு, போக்குவரத்து செலவு, மருத்துவக் காப்பீடு ஆகிய செலவினங்களுக்காக இத்தொகை வழங்கப்படுகிறது. தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது கடந்த 6 மாத காலமாக இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.  ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் முதல் வகுப்பில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: உரிய ஆவணங்களுடன் முற்றிலும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்த நபர்களுக்கு முதல்கட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படுபவர்களில் இருந்து இறுதிகட்ட நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 30விபரங்களுக்கு: www.inlaksfoundation.orgAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us