மனிதவள மேலாண்மை படிப்பு | Kalvimalar - News

மனிதவள மேலாண்மை படிப்பு

எழுத்தின் அளவு :

காரக்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் எம்.எச்.ஆர்.எம்., படிப்பிற்கான அட்மிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.



படிப்பு: மாஸ்டர் ஆப் ஹுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் - எம்.எச்.ஆர்..எம்.,



படிப்பு காலம்: மொத்தம் 4 செமஸ்டர்களுடன் 2 ஆண்டுகள் முழுநேர படிப்பு. 



கல்விக்கட்டணம்: செமஸ்டருக்கு ரூ.75 ஆயிரம். உணவு, விடுதி கட்டணம் மற்றும் இதர செலவினங்கள் தனி.



முக்கியத்துவம்:


விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் மதிப்பு சார்ந்த சுதந்திரமாக இதர துறை சார்ந்த படிப்புகளை படிக்கும் வாய்ப்பு வழங்கும் நோக்கில், தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., காரக்பூரில் மனிதவள மேலாண்மை படிப்பு துவக்கப்பட்டது.



தகுதிகள்:


பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், பார்மசி அல்லது அவற்றிற்கு இணையான துறையில் 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், பிரிவினருக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 7



விபரங்களுக்கு: http://www.iitkgp.ac.in/mhrm



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us