பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சுமாராகத் தேர்வை எழுதியிருப்பதால் அடுத்ததாக பி.எஸ்சி., படிப்பில் சேர வீட்டில் வலியுறுத்துகின்றனர். பி.எஸ்சி., படிக்கலாமா? | Kalvimalar - News

பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சுமாராகத் தேர்வை எழுதியிருப்பதால் அடுத்ததாக பி.எஸ்சி., படிப்பில் சேர வீட்டில் வலியுறுத்துகின்றனர். பி.எஸ்சி., படிக்கலாமா?மே 18,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய கால கட்டத்திற்கான மிகப் பொருத்தமான கேள்வி. இந்தப் பகுதி வெளிவரும் போது பிளஸ் 2 முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொண்டிருப்பர். அத்தனை பேரும் இன்ஜினியரிங்கில் சேர்ந்தால் பிற வேலைகளை யார் தான் செய்வது? எனவே பி.எஸ்சி., படிப்பது பற்றிய எந்த குழப்பமும் உங்களுக்கு வேண்டாம். உங்களது அடிப்படை ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கேற்ப உங்களுக்கான படிப்பை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

பி.எஸ்சி., படிப்பை இன்றும் பல கல்லூரிகள் நடத்துகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பி.எஸ்சி., என்பது மிகுந்த மதிப்பைக் கொண்டிருந்த படிப்பாக விளங்கியதைக் கண்டோம். ஐ.டி., துறையின் எழுச்சிக்குப் பிறகு தான் பி.எஸ்சி., படிக்கலாமா கூடாதா என்ற குழப்பம் நமது மாணவர்களிடம் காணப்படுகிறது. , கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, ஐ.டி., கணிதம், ஹார்ட்டிகல்ச்சர், விவசாயம், பாரன்சிக் சயின்ஸ், சுற்றுச்சூழலியல், பொது உடல்நலம், வனவிலங்கியல் என எத்தனையோ படிப்புகள் பி.எஸ்சி.,யில் தரப்படுகின்றன. உங்களது அடிப்படை ஆர்வத்துக்கேற்ப படிப்பை நீங்கள் தேர்வு செய்யலாம்.

பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி போன்ற புதிய படிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகத்தான் நடத்தப்படுகின்றன. மார்க்கெட்டில் இந்த வார்த்தைகளுக்கு இருக்கும் மதிப்பைக் காசாக்கிட பல கல்லூரிகள் சரியான வசதிகள் இன்றி இந்த படிப்புகளை நடத்துகின்றன.

எனினும் சிறப்பான ஆய்வக மற்றும் கள ஆய்வு வசதிகளைக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் நீங்கள் இதைப் படிக்கலாம். இந்தப் பிரிவுகளைப் பொறுத்த மட்டில் பி.எஸ்சி.,யோடு நின்று விடாமல் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டால் தான் துறையில் ஓரளவு நல்ல வேலைகளைப் பெற முடியும்.

எந்தப் பிரிவு பி.எஸ்சி., படித்தாலும் அதில் சிறப்பான துறைத் திறன்களைப் பெறுவது மிக மிக முக்கியம். கம்ப்யூட்டர் சயின்ஸாக இருந்தாலும் சரி பிற பிரிவு பி.எஸ்சி., என்றாலும் சரி நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் அதில் நீங்கள் நல்ல மதிப் பெண்களை விட சிறப்பான திறன்களைப் பெறுவது தான். எனவே பி.எஸ்சி., மோசமான படிப்பல்ல என்பதை மனதில் கொண்டு உற்சாகமாக அதில் சேரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us