பேங்கேஜிங் படிப்பு | Kalvimalar - News

பேங்கேஜிங் படிப்பு

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கேஜிங் கல்வி நிறுவனத்தால் பேங்கேஜிங் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொலைநிலை கல்வி முறையிலான டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




அறிமுகம்


பேங்கேஜிங் துறையில் நிலையான தரத்தை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் 1966ம் ஆண்டு இக்கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது. மத்திய வணிக அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது. மும்பையில் தலைமை இடத்தை கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்தில் கிளை வளாகங்கள் டில்லி, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் செயல்படுகின்றன.



படிப்பு: டிப்ளமா இன் பேங்கேஜிங்



கால அளவு: 18 மாதங்கள்



கல்விக் கட்டணம்: ரூ.70 ஆயிரம் மற்றும் ஜி.எஸ்.டி., வரி.



தகுதிகள்:


பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட இளநிலை பட்டப்படிப்பு. அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வணிகவியல், கலை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கலாம். உரிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட டிப்ளமா படிப்பை நிறைவு செய்தவர்களும் இப்படிப்பை படிக்கலாம். எனினும், அவர்கள் ஓர் ஆண்டு உரிய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதும் இல்லை.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31



விபரங்களுக்கு: www.iip-in.com



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us