ஆன்லைனில் பி.எஸ்., படிப்பு | Kalvimalar - News

ஆன்லைனில் பி.எஸ்., படிப்பு

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சென்னை, வாய்ப்புகள் மிகுந்த டேட்டா சயின்ஸ் துறையில் ஆன்லைன் வாயிலான பி.எஸ்., படிப்பை வழங்குகிறது.




முக்கியத்துவம்:


இது நாட்டின் சிறந்த தொழில்நுட்ப கல்விநிறுவனத்தால், டிப்ளமா அல்லது பி.எஸ்சி., டிகிரியுடன் வெளியேறும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதல் 4 ஆண்டு பி.எஸ்., - டேட்டா சயின்ஸ் அண்டு அப்பிளிகேஷனஸ் படிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நான்கு ஆண்டுகளில் அனைத்து பாடங்களிலும் வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பி.எஸ்., பட்டமும், இடைநிற்பவர்களுக்கு நிறைவு செய்த பாடங்களுக்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமா அல்லது பி.எஸ்சி., பட்டம் வழங்கப்படும்.




படிப்பு நிலைகள்:


பவுண்டேஷன் சர்ட்டிபிகேட் - 8 பாடங்கள்


டிப்ளமா இன் புரொகிராமிங் அல்லது டேட்டா சயின்ஸ் - புரொகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் இரண்டிலும் தலா 6 பாடங்கள் மற்றும் தலா 2 புராஜெக்ட்கள்


பி.எஸ்சி., இன் புரொகிராமிங் அண்டு டேட்டா சயின்ஸ்


பி.எஸ்., இன் டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளிகேசன்ஸ்



கிரெடிட் முறை:


ஒவ்வொரு பாடம் மற்றும் புராஜெட்களுக்கும் 2 முதல் 4 கிரெடிட்கள் வரை வழங்கப்படுகின்றன. அதன்படி, பவுண்டேஷன் நிலையில் 32 கிரெடிட்கள், டிப்ளமா நிலையில் மொத்தம் 54 கிரெடிட்கள், பி.எஸ்சி., மற்றும் பி.எஸ்., நிலைகளில் தலா 28 கிரெடிட்கள் வழங்கப்படுகின்றன. ஒரு மாணவர் நிறைவு செய்யும் பாடங்களுக்கு ஏற்ப பெறப்படும் மொத்த கிரெடிட்களுக்கு ஏற்ப அவருக்கு பட்டம் வழங்கப்படும். மொத்தமுள்ள 142 கிரெட்டிகளையும் பெறும் மாணவருக்கு பி.எஸ்., பட்டம் வழங்கப்படுகிறது.




சேர்க்கை முறை:


ரெகுலர் என்ட்ரி மற்றும் ஜே.இ.இ., என்ட்ரி என இரண்டு முறைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் அனைவரும் 4 வாரகால கோர்ஸ்வொர்க் நிறைவு செய்ய வேண்டும். அதன்பின் ரெகுலர் என்ட்ரி முறையில் சேர்க்கை பெறுபவர்கள், கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வை எழுத வேண்டும். 



ஜே.இ.இ., தேர்வு எழுதியவர்கள் 4 வாரகால கோர்ஸ்வொர்க் நிறைவு செய்தபின் நடத்தப்படும் 4 மணிநேர வினாடி வினாவில் பங்கேற்க வேண்டும். அவற்றில் பெறும் மதிப்பெண்களை பொறுத்தே முதல் பருவத்தில் வழங்கப்படும் 4 பாடங்களையும் தேர்வு செய்ய முடியும். 



கால அளவு: பி.எஸ்., பட்டம் பெற 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகளுக்குள் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து பாடங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும்.




தகுதிகள்:


10ம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தை படித்திருக்க வேண்டும். மேலும், மூன்றாண்டு டிப்ளமா படிப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த படிப்பை இரண்டாம் பட்டமாக தொடரலாம். பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் சேரலாம். வயது வரம்பு இல்லை.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 15



விபரங்களுக்கு: www.onlinedegree.iitm.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us