தொலைநிலைக் கல்வி முறையில் ஆஸ்திரேலிய மேனேஜ்மென்ட் படிப்பு தரப்படுவதாக அறிந்தேன். இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

தொலைநிலைக் கல்வி முறையில் ஆஸ்திரேலிய மேனேஜ்மென்ட் படிப்பு தரப்படுவதாக அறிந்தேன். இதைப் பற்றிக் கூறவும்.மே 18,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம்.தொலைநிலைக் கல்வி முறையில் இப்படிப்பு தரப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மிகப் பெரிய மேனேஜ்மென்ட் நிறுவனமான சீப்லி பிசினஸ் பள்ளி தொலைநிலைக் கல்வி முறையில் டிப்ளமோ இன் பிசினஸ் படிப்புகளைத் தருகிறது.

இன்றைய தொழிலுலகில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகள் வெறும் தத்துவ விளக்கங்களாக இருப்பதை விட நல்ல தலைமைப் பண்புகளை வளர்ப்பது, திட்ட மேலாண்மை, பிரச்னைகளை அலசுதல், தொழிலாளர் நிர்வாகம் போன்ற பகுதிகளில் ஆழமான கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேவைகளை நிறைவேற்றவும் அனுபவமும் அறிவார்ந்த தேவைக்கேற்ற படிப்புகளைத் தருவதன் மூலமாக நிர்வாகவியலில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரவும் சீப்லி கல்வி நிறுவனம் இந்த தொலைநிலைப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இநத் முறையானது செலவுகளைக் குறைப்பதோடு படிப்பதிலுள்ள தூர இடைவெளிகளை அகற்றும் என்பதும் சிறப்பம்சமாகும். பொதுவாகவே தொலை நிலைக் கல்வி முறையில் இருக்கும் இடைவெளியாகக் கருதப்படுவது ‘தகவல் பரிமாற்றத்திலுள்ள இடைவெளி தான். இக்குறையை நீக்கும் விதத்தில் இந்த படிப்புகள் பல்வேறு உத்திகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாட்ரூம் எனப்படம் இ-கம்யூனிடிஸ் வாயிலாக பயில்பவர்களும் ஆசிரியர்களும் செமினார் வாயிலான பாட பரிமாற்றங்களைச் செய் முடியும். இந்த வகை செமினார்களில் உலகார்ந்த பல தொழில் நுட்ப வல்லுனர்களின் பங்கிருப்பதால் படிப்பானது முழுமையானதாக இருக்கும். மேலும் பாட திட்டங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள் ளன. இதில் வெற்றி பெற்றால் உலக அங்கீகாரம் கொண்ட சான்றிதழ்கள் தரப்படும்.

இந்த எம்.பி.ஏ., படிப்புகளில் பிரைமரி எம்.பி.ஏ., படிப்புகள் பொதுவான நிர்வாகவியல் படிப்பாகத் தரப்படும். தொழில் நுட்பம் படித்த மாணவர்களுக்கான சிறப்புப் படிப்புகளாக இன்ஜினியரிங் ரிஸ்க், பார்மாசூடிக்கல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ., இன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட், எம்.டெக்., (புராஜக்ட் மேனேஜ் மென்ட்) போன்ற படிப்புகள் தரப்படுகின்றன. சமீபத்தில் இந்த நிறுவனம் புராஜக்ட் மேனேஜ்மென்ட், பிசினஸ் ஸ்டிராடஜி, அப்ளைட் மேனேஜ்மென்ட், லீடர்ஷிப் போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இப்படிப்புகள் துறையுடன் மிக அதிகத் தொடர்புடைய படிப்புகளாக உருவாக்கப் பட்டுள்ளன. உலகளாவிய தொழில் நிபுணர்களின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படுகிறது. தரம் வாய்ந்த பாடங்களைக் கொண்டிருக்கின்றன. இந்தப் படிப்புகளை முடிப்பவருக்கு உலகளாவிய வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. இதன் கட்டணம் பிறவற்றோடு ஒப்பிடுகையில் குறைவு தான்.

எம்.பி.ஏ.,வில் நிர்வாகவியல் அடிப்படைகள், நிதி நிர்வாகம், மக்கள், உத்திகள், தொழிற் சட்டம், பொருளாதாரம், புராஜக்ட் போன்றவை கட்டாயப் பாடங்களாக இருக்கின்றன. விருப்பப் பாடங்களாக பன்னாட்டு வாணிபம், மார்க்கெட்டிங் போன்ற பாடப் பகுதிகள் இருக்கின்றன.

இந்தப் படிப்புகளுக்கு பட்டப்படிப்பு தகுதி பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம். 12 பிரிவுகளைக் கொண்டுள்ள எம்.பி.ஏ., படிப்பானது 18 மாதங்களில் முழு நேரப் படிப்புக்கான பாடத் திட்டங்களைக் கொண்டிருக்கிறது. பொதுவாக இந்தப் படிப்பை ஏற்கனவே ஒரு வேலையில் இருப்பவர்களே பெரும்பாலும் படிப்பதால் 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் படிப்பைப் பொதுவாக இவர்கள் நிறைவு செய்கின்றனர். இந்தப் படிப்பை 10 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பு பற்றிய முழு தகவல்களையும் www.chiefly.edu.au தளத்திற்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம். ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த படிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அசைன்மென்டுகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர விரிவாக விடையளிக்கும் தேர்வுகளையும் எழுத வேண்டும். நேரடித் தேர்வுகளை இந்தியாவிலும் மேலும் உலகின் பல மையங்களிலும் எழுதலாம்.

இதுவரை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 8 ஆயிரம் பேரும் இந்தியாவிலிருந்து மட்டும் 500 பேரும் இந்தப் படிப்புகளை முடித்துள்ளனர். தற்போது இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்களோடு இணைந்து இந்த ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் தனது படிப்புகளை தந்திட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய எம்.பி.ஏ., படிப்பை அதுவும் தொலைநிலைக் கல்வி முறையிலாவது படிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நன்றாக யோசித்து முடிவு செய்து கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us