கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விருப்பப் பாடங்கள்:
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், சமூக அறிவியல், கணினி அறிவியல், பொருளாதாரம், வணிகவியல்.
படிப்பு காலம்: குறைந்தது 2 ஆண்டுகள்; அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் படிப்பை நிறைவு செய்ய வேண்டும்.
தகுதிகள்:
என்.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டு நேரடி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். தற்போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளி ஏதேனும் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருப்பதும் அவசியம்.
மேலும், பாடப்பிரிவுக்கு ஏற்ப துறை சார்ந்த பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். விரிவான் கல்வித் தகுதி தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31
விபரங்களுக்கு: https://b-u.ac.in/