இஸ்ரேல் அரசு உதவித்தொகை | Kalvimalar - News

இஸ்ரேல் அரசு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இஸ்ரேல் நாட்டின் வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சகம் அந்நாட்டின் சிறந்த கல்வி அனுபவத்தை பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. தற்போது 2023-24ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?:
எம்.ஏ., பிஎச்.டி., சர்வதேச படிப்புகள், சிறப்பு படிப்புகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிற்காக அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரையிலான 8 மாத கால முழு கல்வி ஆண்டிற்கான படிப்பு அல்லது ஹிப்ரூ / அரபிக் மொழிக்கான 3 மாதகால கோடைகால படிப்பு ஆகியவற்றிகாக இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை விபரம்:
8 மாதகால படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீதம் வரை உதவித்தொகை வழங்கப்படும். எனினும், அதிகபட்சமாக 6 ஆயிரம் டாலர் வரை மட்டுமே வழங்கப்படும். இவைதவிர, படிப்பு காலத்தில் மாத செலவினங்களுக்கு நிதி வழங்கப்படுதோடு, அடிப்படை மருத்துவ காப்பீடும் உண்டு.

கோடைகால படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணம், தங்குமிட வசதி, 3 வார கால செலவினங்களுக்கான நிதி மற்றும் அடிப்படை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

தகுதிகள்:
பி.ஏ., அல்லது பி.எஸ்சி., அல்லது அவற்றை விட உயர்ந்த படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டு துவங்கும் தருணத்தில், 35 வயது மிகாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
கல்வி சான்றிதழ்கள், டோபல், ஜி.ஆர்.இ., ஐ.இ.எல்.டி.எஸ்., மற்றும் ஜிமேட் ஆகியவற்றில் தேவையான தேர்வு சான்றிதழ், சுயவிபரக் குறிப்பு, புகைப்படங்கள் உட்பட தேவையான இதர சான்றுகளின் மூன்று நகல்களுடன் இஸ்ரேல் தூதரகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 1, 2023

விபரங்களுக்கு:
https://www.gov.il/en/service/scholarships_application_for_academic_studies_in_israel மற்றும் https://www.education.gov.in/en


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us