திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பாடப்பிரிவுகள்:
மார்க்கெட்டிங், பினான்ஸ், ஆப்ரேஷன்ஸ், ஹுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், டிஜிட்டல் பிசினஸ் அண்டு அனலிட்டிக்ஸ்.
படிப்பு காலம்: 2 ஆண்டுகள் கால அளவு கொண்ட முழு நேர படிப்பு
தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், கேட் 2022, ஜிமேட் 2021 அல்லது 2022, எக்ஸ்.ஏ.டி., 2023 ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவன இணையதளம் வாயிலாக முற்றிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31, 2023
விபரங்களுக்கு: https://bim.edu