கல்வியில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின பெண் குழந்தைகளுக்கு பேகம் ஹசரத் மகால் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் முன்பு மவுலானா ஆசாத் நேஷனல் ஸ்காலர்ஷிப் அழைக்கப்பட்டது.
நோக்கம்: நிதி பற்றாக்குறை காரணமாக கல்வியை தொடர் முடியாமல் அவதியுறும் சிறுபான்மையின பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் தலா 5 ஆயிரம் ரூபாயும், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் தலா 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
தகுதிகள்: இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம், புத்தம், ஜெயின் மற்றும் பர்சிய மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. வகுப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவியரது பெற்றோர் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 15
விபரங்களுக்கு: https://scholarships.gov.in/