பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கியத்துவம்:
பாடப்பிரிவுகள் அனைத்தும், தேசிய கல்விக்கொள்கையின் குறிக்கோள்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், ஊக்கமும், சமூகம் குறித்த சிந்தனைகளும் மிகுந்த, சுய பரிசோதனை செய்யவும், சுயமாகக் கற்கக்கூடிய ஆற்றல் மிகுந்த இளைய தலைமுறையை உருவாக்குவதே, இப்பட்டப்படிப்புகளின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போபாலிலும் புதியதாக கல்வி வளாகத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ., ஹானர்ஸ் - பொருளாதாரம் / ஆங்கிலம் / வரலாறு / தத்துவவியல் / சமூக அறிவியல்
பி.எஸ்சி., ஹானர்ஸ் - உயிரியல் / வேதியியல் / கணிதம் / இயற்பியல் / சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை அறிவியல்
பி.எஸ்சி., பி.எட்., - உயிரியல் / வேதியியல் / கணிதம் / இயற்பியல்
கால அளவு: 4 ஆண்டுகள்
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ., - கல்வி / வளர்ச்சி
எல்எல்.எம்., - சட்டம் மற்றும் மேம்பாடு
எம்.ஏ., - பொருளாதாரம்
எம்.பி.எச்., - பொது சுகாதார படிப்பு
இவைதவிர, சில பிரிவுகளில் டிப்ளமா மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
சேர்க்கை முறை:
இப்பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை முறை இரண்டு சுற்றுகளாக நடைபெறும். சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நிதியுதவி:
தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக் கட்டணத்திற்காக முழு மற்றும் பகுதி அளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24 நவம்பர் 2022
தேசிய நுழைவுத் தேர்வு: 24 டிசம்பர் 2022
நேர்முகத் தேர்வு: ஜனவரி - பிப்ரவரி 2023
விபரங்களுக்கு: https://azimpremjiuniversity.edu.in/