ஒரு பெண் குழந்தை உதவித்தொகை | Kalvimalar - News

ஒரு பெண் குழந்தை உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி முதுநிலை பட்டப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கும் குடும்பத்தில், அப்பெண்ணின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்:
* 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
* இளநிலை பட்டப்படிப்பை முடித்து, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

* முழுநேர படிப்பில் மட்டுமே சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தொலைநிலை படிப்பிற்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.

உதவித்தொகை: ஆண்டுக்கு 36 ஆயிரத்து 200 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விடுதிக் கட்டணம், மருத்துவ செலவு என இதர செலவீனங்களுக்கு என தனியாக உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.

மொத்த உதவித்தொகை எண்ணிக்கை:
3,000

விண்ணப்பிக்கும் முறை: தேசிய உதவித்தொகை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30

விபரங்களுக்கு: https://scholarships.gov.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us