அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் இந்தியாவில் மாணவர்களுக்கு டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்: கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக, டாடா நிறுவனம் அளித்த 25 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை நிதியில் இத்திட்டத்திம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
துறைகள்: கார்னெல் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். கட்டடக்கலை, ஆர்ட் மற்றும் பிளானிங், இன்ஜினியரிங், அப்ளைடு எக்னாமிக்ஸ், மேனேஜ்மெண்ட், பயோலஜிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ் மற்றும் இதர அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த படிப்புகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உதவித்தொகை எண்ணிக்கை: ஒவ்வொரு ஆண்டும், 20 சிறந்த இந்திய மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிரதான தகுதிகள்: இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும். பள்ளி படிப்பை இந்தியாவிலேயே படித்திருக்க வேண்டும்.
விதிமுறைகள்: நிதித் தேவை இருக்கும் வரை, இளநிலை பட்டப்படிப்பை முடிக்க தேவையான செமஸ்டர்களுக்கு டாடா உதவித்தொகையை பெறலாம். அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்கிடெக்சர் படிப்பின் ஐந்து ஆண்டுகாலத்தில் பத்து செமஸ்டர்கள் தேவைப்படும். ஆனால், எட்டு செமஸ்டர் வரையே உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், ஒரே காலத்திலான இரண்டு மேஜர் படிப்புகள் மற்றும் அல்லது இரட்டைப் பட்டப்படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ள படிப்புகளில் சேர்க்கை பெற்று, நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் டாடா உதவித்தொகைக்கு பரிசீலிக்கப்படுவர். எனினும், பல்கலைக்கழக விதிமுறைப்படி, காலேஜ் ஸ்காலர்ஷிப் சர்வீஸ் முறையில், சர்வதேச மாணவர்களுக்கான நிதி உதவி விண்ணப்ப நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 2, 2023
விபரங்களுக்கு: https://admissions.cornell.edu/apply/international-students/tata-scholarship