மேலாண்மை நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

மேலாண்மை நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

தேசிய அளவிலான மேலாண்மை நுழைவுத் தேர்வுகளில் ஒன்று சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட்.

முக்கியத்துவம்: இந்தியாவில் நடத்தப்படும் மேலாண்மை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளில் முக்கியமான இத்தேர்வு கடந்த 72 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத்தேர்வில் மாணவ, மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 160க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் மேலாண்மை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

தேர்வு மையங்கள்: பெங்களூரு, சென்னை, கோவை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, மதுரை, மங்களூர், திருச்சி, திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 30

தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 8, 2023

விபரங்களுக்கு: https://xatonline.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us