டி.என்.ஏ., கைரேகை பயிற்சி | Kalvimalar - News

டி.என்.ஏ., கைரேகை பயிற்சி

எழுத்தின் அளவு :

அடிப்படை டி.என்.ஏ., கைரேகை குறித்த பிரத்யேக பயிற்சியை கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தாவர உயரிதொழில்நுட்பத் துறை வழங்குகிறது.

அறிமுகம்: இந்த 5 நாள் சிறப்பு பயிற்சி முகாமில், மூலக்கூறு சந்தைகள் குறித்த அறிமுகம், டி.என்.ஏ., கைரேகையில் மூலக்கூறு சந்தைகள், மல்ட்டி-லோகஸ் மார்க்கர் சிஸ்டம்ஸ், சிங்கில்-லோகஸ் மார்க்கர் சிஸ்டம்ஸ் உட்பட பல்வேறு தொழில்நுட்ப வகுப்புகள் செயல்முறை பயிற்சியுடன் வழங்கப்படுகிறது.


யார் பங்கேற்கலாம்?

லைப் சயின்சஸ் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது ஆராய்ச்சி மாணவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களும் இப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். முதலில் விண்ணப்பிக்கும் 30 பேருக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி கட்டணம்:
ரூ. 2,950

பயிற்சி நாட்கள்: நவம்பர் 14 - 18

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 7

விபரங்களுக்கு: https://tnau.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us