என்மேட் தேர்வு | Kalvimalar - News

என்மேட் தேர்வு

எழுத்தின் அளவு :

நாடுமுழுவதிலும் உள்ள பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகளில் ஒன்று என்மேட். 



சிறப்பம்சங்கள்: ஜிமேக் அமைப்பால் நடத்தப்படும் இத்தேர்வு எளிமைத் தன்மையை கொண்டுள்ளது. தவறான பதிலுக்கு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் கிடையாது; தேர்வு எழுதிய உடனேயே மதிப்பெண் அறிந்துகொள்ளலாம்; 48 மணிநேரத்திற்குள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.



தேர்வு முறை: லாங்குவேஜ் ஸ்கில்ஸ், குவாண்டிடேடிவ் ஸ்கில்ஸ், லாஜிக்கல் ரீசனிங் ஆகிய தாள்களை உள்ளடக்கிய இத்தேர்வில் தாளுக்கு தலா 36 கேள்விகள் வீதம் 108 கேள்விகள் இடம்பெறும். 




அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்கள்:


எஸ்.வி.கே.எம்., நர்சீ மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்


கே.ஜே. சோமையா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் 


இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்


எஸ்.பி.ஜே.ஐ.எம்.ஆர்.,


எக்ஸ்.ஐ.எம்., பல்கலைக்கழகம்


டி.ஏ.பாய் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட்


ஐ.சி.எப்.ஏ.ஐ., பிசினஸ் ஸ்கூல்


எஸ்.ஓ.ஐ.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் 


எப்.எல்.ஏ.எம்.இ., பல்கலைக்கழகம்


ராஜிவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் லா - பஞ்சாப்


ஐ.எஸ்.பி.ஆர்., பிசினஸ் ஸ்கூல்


சிவ் நாடார் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்


ஜெயின் பல்கலைக்கழகம்


ஜி.ஐ.டி.எ.எம்., பல்கலைக்கழகம் - விசாகப்பட்டினம்


எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம்


உட்பட ஏராளமான கல்வி நிறுவனங்களின் இத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.



தேர்வு செய்யப்படும் முறை: இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டு விருப்பப்படும் கல்வி நிறுவனத்திற்கு மாணவர்கள் பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மாறுபடலாம். ஆகவே, மாணவர்கள் அந்தந்த கல்வி நிறுவன இணையதளத்தின் வாயிலாக உரிய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 10



விபரங்களுக்கு: https://www.mba.com/en-in/exams/nmat



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us