ஏ.சி.இ.டி., தேர்வு அறிவிப்பு | Kalvimalar - News

ஏ.சி.இ.டி., தேர்வு அறிவிப்பு

எழுத்தின் அளவு :

இன்ஸ்டிடியூட் ஆப் ஆக்ட்சுயரிஸ் ஆப் இந்தியா நடத்தும் ஆக்ட்சுயரியல் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதி: 10ம் மற்றும் 12ம் வகுப்புகளில் ஆங்கிலம் ஒரு பாடமாக பாடம் படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். கணிதம் சார்ந்த துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும், படித்துக்கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக, பொறியியல் மாணவர்கள், சார்ட்டர்டு அல்லது காஸ்ட் அக்கவுண்டண்ட், மேலாண்மை துறை பட்டதாரிகள், கம்பெனி செக்ரட்டரிஸ் ஆகியோர் இத்தேர்வை எழுதலாம்.
தேர்வு முறை: ஆண்டிற்கு குறைந்தது இரண்டு முறை நடத்தப்படும் இந்த தேர்வு, கணினி வழி தேர்வாக நடைபெறுகிறது. மல்டிபிள் சாயிஸ் கேள்விகளாக மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம்பெறும். கணிதம், புள்ளியியல், ஆங்கிலம், தர்க்க ரீதியான நியாயவாதம் ஆகிய பாடப்பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை: https://actuariesindia.org/acet-november-2022-registration-live-now எனும் ஐ.ஏ.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 22தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 26விபரங்களுக்கு: https://actuariesindia.org/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us