சிறுபான்மை பிரிவினர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்களை மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் வழங்குகிறது.
பள்ளி, பாரம்பரிய மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் படிக்கும் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர், ஜெயின் மற்றும் பார்சியம் ஆகிய பிரிவினர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை திட்டங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பிரி மெட்ரிக் உதவிதொகை: நடந்து முடிந்த இறுதி ஆண்டு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்கும் ஒன்று முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை: 11ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* மெரிட் கம் மீன்ஸ் உதவித்தொகை: தொழில்நுட்ப மற்றும் புரொபஷனல் படிப்புகளை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* பேகம் ஹசரத் மஹால் தேசிய உதவித்தொகை: கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30 மற்றும் 31
விபரங்களுக்கு: https://scholarships.gov.in/