மருத்துவம் சார்ந்த படிப்புகள்! | Kalvimalar - News

மருத்துவம் சார்ந்த படிப்புகள்!

எழுத்தின் அளவு :

வாய்ப்புகள் மிக்க மருத்துவ துறையில் எம்.பி.பி.எஸ்., படிக்க லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அனைவருக்கும் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகளுக்கு குறைவில்லாத பல்வேறு மருத்துவம் சார்ந்த படிப்புகள் வாயிலாகவும் மருத்துவ துறையில் பிரகாசிக்க முடியும் என்பதை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது.மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள்:


பி.பார்ம்., 


பி.பி.டி., 


பி.ஏ.எஸ்.எல்.பி.,


பி.எஸ்சி., -  நர்சிங்


பி.எஸ்சி., -  ரேடியோகிராபி அண்டு இமேஜிங் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  கார்டியோ-பல்மொனரி பர்பியூஷன் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  மெடிக்கல் லேபாரெட்டரி டெக்னாலஜி


பி.எஸ்சி., -  ஆப்ரேஷன் தியேட்டர் அண்டு அனெஸ்தீசியா டெக்னாலஜி


பி.எஸ்சி., -  கார்டியாக் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  டயாலிசிஸ் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  ஆக்சிடெண்ட் அண்டு எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  ரெஸ்பிரேட்டரி தெரபி


பி.ஆப்தொமெட்ரி


பி.ஓ.டி.,


பி.எஸ்சி., -  நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி


பி.எஸ்சி., -  கிளினிக்கல் நியூட்டிரிஷன்டிப்ளமா படிப்புகள்:


டெண்டல் மெக்கானிக் - மாணவர்கள்


டெண்டல் ஹைஜீனிக் - மாணவிகள்


டிப்ளமா இன் மெடிக்கல் லேபாரெட்டரி டெக்னாலஜி


டிப்ளமா இன் ரேடியோ டயக்னாசிஸ் டெக்னலாஜி


டிப்ளமா இன் ரேடியோ தெரபி


டிப்ளமா இன் ஆப்தோமெட்ரி


டிப்ளமா இன் பார்மசி


ஹோம் ஹெல்த்கேர்


டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டெண்ட்இவை தவிர, பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.கல்வித்தகுதி: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். எனினும், 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை படித்திருப்பது பொதுவான கல்வித்தகுதி.கல்வி நிறுவனங்கள்: தனியார் கல்வி நிறுவனங்களில் இவை போன்ற மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் பரவலாக வழங்கப்படுகின்றன. என்றபோதிலும், தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வு வாயிலாக குறைவான கல்விக்கட்டணத்தில் இத்தகைய படிப்புகளை படிக்கலாம். அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: https://tnmedicalselection.net அல்லது www.tnhealth.tn.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 12விபரங்களுக்கு: www.tnhealth.tn.gov.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us