ஆங்கில இலக்கியம் படித்து வரும் எனது சகோதரனுக்கான வாய்ப்புகள் என்ன? | Kalvimalar - News

ஆங்கில இலக்கியம் படித்து வரும் எனது சகோதரனுக்கான வாய்ப்புகள் என்ன?மே 03,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

தொன்று தொட்டு தனது பாரம்பரியமான மதிப்பை இழந்திடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ள படிப்புகளில் ஆங்கில இலக்கியமும் ஒன்று. வெளியிலிருந்து பார்த்தால் அன்னிய இலக்கியத்தோடு தொடர்புடைய படிப்பு போலத் தோன்றினாலும் ஆங்கில இலக்கியம் அருமையான படிப்புகளில் ஒன்று.

பதிப்பு, மொழிபெயர்ப்பு, இதழியல், எழுத்துப் பணிகள், அவுட்சோர்சிங், ‘டிவி’, ரேடியோ, திரைப்படம், ஸ்கிரீன்பிளே, கன்டென்ட் புரவைடர்ஸ் என இன்று ஆங்கில இலக்கியத்தில் குறைந்தது பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கான தொடர்புடைய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

இந்தப் படிப்பை முடித்திருப்பவருக்கான சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்வது அதில் நீங்கள் பெறும் புலத்திறன் தான். விளம்பரம், வாடிக்கையாளர் சேவை என எத்தனையோ வாய்ப்புகளையும் கூட நீங்கள் பெறலாம். இன்றைய டிரெண்டான பி.பி.ஓ., துறையும் உங்களது தகுதிக்கான திறன்களைக் கொண்டவருக்கு மிகவும் பொருந்தும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us