வித்யாதன் உதவித்தொகை | Kalvimalar - News

வித்யாதன் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பொருளாதாரத்தில் பின் தங்கிய, கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.



உதவித்தொகை விபரம்: தேர்வு செய்யப்படும் 11ம் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.



யார் விண்ணப்பிக்கலாம்?


* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள். 


* தமிழகம் அல்லது புதுச்சேரியில் இருந்து 2022ம் ஆண்டில் 10ம் வகுப்பு தேர்வை குறைந்தது 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள். 


* மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.



தேவையான ஆவணங்கள்: புகைப்படம், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் வருமான சான்றிதழ்.



தேர்வு செய்யப்படும் முறை:  கல்வித் திறன் மற்றும் விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் ஆன்லைன் தேர்வு அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அவற்றின் வாயிலாக தகுதியான மாணவர்கள் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 15



நுழைவுத்தேர்வு / நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: செப்., 1 முதல் 30ம் தேதிக்குள்.




விபரங்களுக்கு: 


இ-மெயில்: vidyadhan.tamilnadu@sdfoundationindia.com 


இணையதளம்: https://www.vidyadhan.org/apply



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us