சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முற்றிலும் ஆன்லைன் வாயிலாக ஐந்து பட்டப்படிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.
படிப்புகள்:
பி.காம்., - 3 ஆண்டுகள்
பி.ஏ., - இங்கிலீஷ் - 3 ஆண்டுகள்
எம்.பி.ஏ., - 2 ஆண்டுகள்
எம்.ஏ., - வரலாறு - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - கணிதம் - 2 ஆண்டுகள்
தகுதிகள்: பி.ஏ., மற்றும் பி.காம்., படிப்புகளுக்கு 12ம் வகுப்பு அல்லது மூன்று ஆண்டு டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளில் சேர ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி., -கணிதம் படிப்பில் சேர பி.எஸ்சி., கணிதம் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முற்றிலும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் இப்படிப்புகளுக்கான பாடப்புத்தகங்கள், வீடியோ பதிவுகள், கலந்துரையாடல் பகுதி, விளக்க உரைகள், நேரடி ஒளிபரப்பு வகுப்புகள், அனிமேஷன் செய்யப்பட்ட பாடங்கள், பயிற்சி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: தேவையான கல்வி சான்றிதழ்கள், அரசு அடையாள அட்டைகள் ஆகியவற்றுடன் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: https://online.periyaruniversity.ac.in/