தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு, கலை, அறிவியல் ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஓர் உயராய்வு நிறுவனமாக 1981ம் ஆண்டு தஞ்சாவூரில் இப்பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
வழங்கப்படும் படிப்புகள்:


ஒருங்கிணந்த பட்டப்படிப்புகள் - 5 ஆண்டுகள்:


எம்.ஏ., - இலக்கியத்துறை, நாடகத்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை.முதுநிலை பட்டப்படிப்புகள்- 2 ஆண்டுகள்:


எம்.ஏ., - இசை, நாடகம் மற்றும் அரங்கக்கலை, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியியல், தமிழும் சுவடியியலும், செம்மொழி தமிழ், யோகா, திருக்கோயில் நிர்வாகம், சுற்றுலாவியல் மற்றும் தத்துவம், மொழிபெயர்ப்பு, தத்துவம், சமூகப்பணி, , மானுடவியல் மற்றும் பழங்குடியியல்எம்.எஸ்சி., - சுற்றுச்சூழல் அறிவியல், கணிப்பொறி அறிவியல், நிலத்தியல்முதுநிலை பட்டயப்படிப்புகள்: மொழிபெயர்ப்பு, அரங்கக்கலை, கல்வெட்டியல், அகராதியியல், யோகா, ஜியோகிராபிக்கல் இன்பர்மேஷன் சிஸ்டம், பட்டயப்படிப்புகள்: சிற்பக்கலை பயிற்சி, இசை, பரதநாட்டியம், ஆவண மேலாண்மை, நாட்டுப்புறவியல், தெலுங்கு, ஒப்பிலக்கியம், சிலம்பாட்டம், சைவ சித்தாந்தம், வைணவம், திருக்கோயில் நிர்வாகம், கோயில் அர்ச்சகர் பயிற்சி, காந்திய சிந்தனை, யோகா, சுவடியியல், மூலிகை அழகுக்கலை, மூலிகை அறிவியல், கணிப்பொறி பயன்பாடு, அடிப்படைத் தமிழ் இலக்கணம், பயனாக்க மொழியியல், அகடமிக் ரைட்டிங், ஸ்ட்ரஸ் மேனேஜ்மெண்ட், சாப்ட் ஸ்கில்ஸ் அண்டு பர்சனாலிட்டி டெவெலப்மெண்ட், சான்றிதழ் படிப்புகள்: சிற்பக் கலை பயிற்சி, இசை, பரதநாட்டியம், தெலுங்கு, நாட்டுப்புறவியல்.தகுதிகள்: பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். விரிவான விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.பயிற்று மொழி: குறிப்பிட்ட சில படிப்புகளை தவிர அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான பயிற்று மொழி தமிழ்.உதவித்தொகை: ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ் மற்றும் முதுநிலை தமிழ் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.தமிழ் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலை தமிழ் மற்றும் 2 ஆண்டு முதுநிலை தமிழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு அந்த நிறுவனத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை பல்கலைக்கழகத்திற்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:


ஒருங்கிணைந்த படிப்புகள் - ஜூலை 20


முதுநிலை படிப்புகள் - ஜூலை 30


முதுநிலை டிப்ளமா, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் - ஆகஸ்ட் 30விபரங்களுக்கு: www.tamiluniversity.ac.in


 


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us