டி.என்.இ.ஏ., - 2022 | Kalvimalar - News

டி.என்.இ.ஏ., - 2022

எழுத்தின் அளவு :

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும், இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.




கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்:


அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பல்கலைக் கல்லூரிகள், தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்கள் ஆகியவை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை - டி.என்.இ.ஏ., கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.



இவைதவிர, சென்டரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - காரைக்குடி, சென்டரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி - சென்னை மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி - சேலம் ஆகிய மத்திய அரசு கல்வி நிறுவனங்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.



படிப்புகள் மற்றும் கால அளவு:


பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பு - 8 செமஸ்டர்கள் வீதம் மொத்தம் நான்கு ஆண்டுகள்


பி.இ., (சாண்ட்விச்), படிப்பு - 10 செமஸ்டர்கள் வீதம் மொத்தம் ஐந்து ஆண்டுகள்



பிரிவுகள்:


ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், என்விரான்மெண்டல் இன்ஜினியரிங், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உட்பட ஏராளமான பாடப்பிரிவுகள்.



கல்வித் தகுதி:


12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில தொழில்பிரிவு மாணவர்களும் குறிப்பிட்ட பொறியல் படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.



தேவைப்படும் சான்றிதழ்கள்:


பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் தேவைக்கு ஏற்ப இதர சிறப்பு சான்றிதழ்கள்.



கவுன்சிலிங் நடைமுறை:


இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படும், கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க்  பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்ய முடியும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 19



விபரங்களுக்கு: 


இணையதளம்: www.tneaonline.org


தொலைபேசி: 1800 425 0110,  044-22351014, 22351015



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us