கர்நாடக மாநில அரசின் கீழ், பெங்களூருவில் செயல்படும் டாக்டர் பி.ஆர். அம்பேதகர் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.,- எக்னாமிக்ஸ் - 5 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - எக்னாமிக்ஸ் - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - பினான்சியல் எக்னாமிக்ஸ் - 2 ஆண்டுகள்
மாணவர் சேர்க்கை முறை:
சி.யு.இ.டி., - பி.ஜி., எனும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேசிய அளவில் என்.டி.ஏ.,வால் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு வாயிலாக இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 10
விபரங்களுக்கு: https://base.ac.in/