ரிசர்வ் வங்கியால் மும்பையில் அமைக்கப்பட்ட ’இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவெலப்மெண்ட் ரிசர்ச்’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்புகள்:
எம்.எஸ்சி., - பொருளாதாரம்
கால அளவு: 2 ஆண்டுகள்
தகுதி: பி.ஏ., பி.எஸ்சி.,- பொருளாதாரம், பி.காம்., பி.ஸ்டேட்., பி.எஸ்சி., -இயற்பியல் அல்லது கணிதம் அல்லது பி.டெக்., பி.இ., படிப்பு ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
பிஎச்.டி., -டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ்
கால அளவு: 4 ஆண்டுகள்
எம்.ஏ., எம்.எஸ்சி., - பொருளாதாரம், எம்.ஸ்டேட்., எம்.எஸ்சி., - இயற்பியல் அல்லது கணிதம் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் அல்லது ஆப்ரேஷன்ஸ் ரிசர்ச், எம்.பி.ஏ., எம்.டெக்., பி.டெக்., பி.இ., ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
உதவித்தொகை: பிஎச்.டி., மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுகு மாதம் 31 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் ஆண்டு முதல் மாதம் 43 ஆயிரத்து 750 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் வாயிலான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 10
விபரங்களுக்கு: www.igidr.ac.in