பேக்கேஜிங் படிப்புகள் | Kalvimalar - News

பேக்கேஜிங் படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங் கல்வி நிறுவனத்தில் 2022-23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



வழங்கப்படும் படிப்புகள்:




முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.எஸ்சி., - பேக்கேஜிங் டெக்னாலஜி




அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம்: ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஐதராபாத்



கால அளவு: 2 ஆண்டுகள்



வளாகம்: ஐதராபாத்



தகுதிகள்: பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் 4 ஆண்டு கால முழுநேர இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



எம்.எஸ்சி., - பேக்கேஜிங் டெக்னாலஜி




அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம்: குரு கோபிந்த் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், டில்லி




கால அளவு: 2 ஆண்டுகள்




வளாகம்: டில்லி



கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முதன்மை அல்லது இரண்டாம் பாடமாகக் கொண்ட மூன்று ஆண்டு பொறியியல் / தொழிநுட்பம் / அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



முதுநிலை டிப்ளமா படிப்பு: 


பி.ஜி.டி.பி., - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பேக்கேஜிங்



கால அளவு: 2 ஆண்டுகள்




வளாகங்கள்: மும்பை மற்றும் கொல்கத்தா



கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முதன்மை அல்லது இரண்டாம் பாடமாகக் கொண்ட மூன்று ஆண்டு பொறியியல் / தொழிநுட்பம் / அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



சான்றிதழ் படிப்பு: 


சி.பி.இ., - சர்ட்டிபைடு பேக்கேஜிங் இன்ஜினியர்




கால அளவு: ஓர் ஆண்டு




வளாகம்: சென்னை




கல்வித்தகுதி: யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் தேர்ச்சி



தேர்வு முறை: சான்றிதழ் படிப்பு தவிர, பிற அனைத்து படிப்புகளும் கல்வி நிறுவனத்தின் ஐ.ஐ.பி.சி.இ.டி., எனும் பிரத்யேக நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 2



ஐ.ஐ.பி.சி.இ.டி., தேர்வு நாள்: ஜூலை 8



விபரங்களுக்கு: https://www.iip-in.com/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us