சி.ஐ.எப்.என்.இ.டி., | Kalvimalar - News

சி.ஐ.எப்.என்.இ.டி.,

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது, சென்டரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசிரிஸ் நாட்டிக்கல் அண்டு இன்ஜினியரிங் டிரைனிங்!நோக்கம்:


மீன்பிடித்தல் மற்றும் வணிகக் கடல் போக்குவரத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான மனப்பான்மையை வளர்ப்பதற்குரிய மனிதவளத்தை உருவாக்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. அதன்படி, இப்பிரிவுகளில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு படிப்புகளையும், பயிற்சிகளையும் வழங்குகிறது.வளாகங்கள்: கொச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்திற்கு சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் கிளை வளாகங்கள் உள்ளன.இளநிலை பட்டப்படிப்பு: பி.எப்.எஸ்சி., பேச்சுலர் ஆப் பிசிரி சயின்ஸ் - நாட்டிக்கல் சயின்ஸ்
கால அளவு: 4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்கள்
வளாகம்: கொச்சிதகுதிகள்: 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதுகின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.  
வயது வரம்பு: அக்டோபர் 1ம் தேதி நிலவரப்படி, 17 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு மற்றும் சிறந்த கல்வி செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.தேர்வு மையங்கள்: கொச்சி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம்நுழைவுத்தேர்வு நாள்: ஜூலை 2இதர படிப்புகள்: 


வி.என்.சி., - வெசில் நேவிகேட்டர் கோர்ஸ் 


எம்.எப்.சி., - மரைன் பிட்டர் கோர்ஸ்


கால அளவு: 2 ஆண்டுகள்
வளாகம்: கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம்
கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி, 15 முதல் 20 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.உதவித்தொகை: வி.என்.சி., மற்றும் எம்.எப்.சி., படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு மாதம் ரூ. 20,500 மற்றும் ஒரு முறை சீருடை சலுகையாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.தேர்வு முறை: சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.தேர்வு மையங்கள்: கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா மற்றும் பாட்னாநுழைவுத்தேர்வு நாள்: ஜூலை 16விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20விபரங்களுக்கு: https://cifnet.gov.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us