பன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்னும் பெயரில் படிப்பு உள்ளதா? | Kalvimalar - News

பன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்னும் பெயரில் படிப்பு உள்ளதா?ஏப்ரல் 24,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். பன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்பது இன்று வளரக் கூடிய முக்கியமான துறைகளில் ஒன்று. இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் என்னும் தரமான படிப்பை தருகிறது. பி.ஏ. படிப்பான இந்தப் பட்டப்படிப்பு 3 ஆண்டு படிப்பாகும். இது தொடர்பான தகவல்களை பின்வரும் முகவரிகளில் பெறலாம்.

இது 3 ஆண்டு முழு நேரப் படிப்பு. மேலே குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களோடு இணைந்து இந்தப் படிப்பை இக்னோ தருகிறது. பிளஸ் 2 முடித்திருப்போர் இதைப் படிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை இந்த நிறுவனங்களில் ரூ.250 பணமாகச் செலுத்திப் பெறலாம். புதுடில்லியிலுள்ள இக்னோவிலிருந்து ரூ.350 டிடி அனுப்பியும் பெறலாம். இதன் இன்டர்நெட் தளத்திலிருந்தும் டவுண்லோட் செய்து கொண்டு பயன்படுத்தலாம்.
போட்டித் தேர்வு மூலமாகவே இதில் சேர முடியும். விபரங்களை இக்னோவின் இணைய தளமான www.ignou.ac.in பார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us