உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. இந்தியாவில், மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், எத்தனை கேள்விகளை அக்கட்சியின் மீது தொடுத்து, அது தொடர்பான சிறு கையேட்டையும் சமீபத்தில் வெளியிட்டது?
அ. ஏழு
ஆ. பத்து
இ. ஒன்பது
ஈ. ஆறு
2. கடந்த 2022 - 23ஆம் நிதியாண்டில், 3.6 கோடி பேர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த நிலையில், இவர்கள் செலுத்திய அபராதத்தால், இந்திய ரயில்வே துறைக்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது?
அ. ரூ. 1,500 கோடி
ஆ. ரூ. 2,200 கோடி
இ. ரூ. 2,110 கோடி
ஈ. ரூ. 500 கோடி
3. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், தம் 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை, எத்தனை ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துள்ளது?
அ. 32
ஆ. 30
இ. 15
ஈ. 20
4. இந்தியாவின் புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்பட்டதன் நினைவாக, 75 ரூபாய் நாணயத்தை, பிரதமர் மோடி வெளியிட்டார். இதன் மொத்த எடை எவ்வளவு?
அ. 34.65 கிராம்
ஆ. 30.25 கிராம்
இ. 26.45 கிராம்
ஈ. 31.60 கிராம்
5. சென்னைஉயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்று உள்ளவர்?
அ. எஸ்.வைத்தியநாதன்
ஆ. ஆர்.மகாதேவன்
இ. டி.கிருஷ்ணகுமார்
ஈ. எஸ்.வி.கங்கா பூர்வாலா
6. தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை, 6.20 கோடியில் இருந்து, எவ்வளவு கோடியாகச் சரிந்துள்ளது?
அ. 5.12
ஆ. 6.10
இ. 6.12
ஈ. 5.20
7. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, எந்த மாவட்டத்தில் இருந்து, ரூ.1.12 லட்சம் கோடிக்கு, கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி நடந்துள்ளது?
அ. காஞ்சிபுரம்
ஆ. சென்னை
இ. திருப்பூர்
ஈ. கோவை
8. 16வது பிரீமியர் கிரிக்கெட் தொடருடன், ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய அணி வீரர்?
அ. மகேந்திரசிங் தோனி
ஆ. விராத் கோஹ்லி
இ. அம்பதி ராயுடு
ஈ. ரவீந்திர ஜடேஜா
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. அ, 4. அ, 5. ஈ, 6. இ, 7. அ, 8. இ.