இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு, இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய இடங்களைக் கண்டுபிடியுங்கள். இந்த இடங்கள் அனைத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு.
01. மத்தியப் பிரதேசத்தில் ஸ்தூபிகள், ஒற்றைக்கல் சிற்பங்களுக்காகப் பிரபலமான இடம்.
02. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம்.
03. படிக்கட்டுக் கிணறுகளுக்குப் பெயர் பெற்ற இடம். பெயரை உச்சரிக்கும் பொழுதே 'வாவ்' என புகழ்ந்து விடுவோம்.
04. சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடைய முக்கியமான தொல்லியல் தளம். ஹரப்பா நாகரிகத்தின் இரண்டு குறிப்பிடத்தக்க இடங்களில் இது பெரியது.
05. அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்கா. ஒற்றைக்கொம்பு காண்டா மிருகத்திற்காகப் பிரபலமானது.
விடைகள்:
1. சாஞ்சி புத்த சிற்பங்கள்
2. தஞ்சை பெரிய கோவில்
3. ராணி கி வாவ் (குஜராத்)
4. டோலாவிரா (குஜராத்)
5. காசிரங்கா தேசியப் பூங்கா
இவை அனைத்துமே யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச் சின்னங்களாகும்.