உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. மத்திய அரசின் 'சாகர் மாலா' திட்டத்தின் கீழ், சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு, சுற்றுலா பயணிகள் கப்பல் விரைவில் இயக்கப்பட உள்ளது. அந்தக் கப்பலின் பெயர் என்ன?
அ. ஷிவாலிக்
ஆ. விக்ரமாதித்யா
இ. எம்ப்ரஸ்
ஈ. தல்வார்
2. ஜப்பான் நாட்டில் உள்ள எந்தப் பகுதியில், மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்?
அ. டோக்கியோ
ஆ. ஹிரோஷிமா
இ. ஒசாகா
ஈ. நகோயா
3. தமிழகத்தில், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளிலும், 2024 - 2025ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்பு வரை, எந்தப் பாடம் கட்டாயமாக்கப்பட உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது?
அ. தமிழ்
ஆ. ஆங்கிலம்
இ. சமஸ்கிருதம்
ஈ. ஹிந்தி
4. 'உலகப் பொதுமறை' என போற்றப்படும் திருக்குறள், எந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான, 'தோக் பிசின்'ல், சமீபத்தில் வெளியிடப்பட்டது?
அ. மைக்ரோனேசியா
ஆ. டோங்கா
இ. பிரெஞ்ச் பாலினேசியா
ஈ. பப்புவா நியூ கினியா
5. இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில், தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை எந்த அளவு குறைந்துள்ளதாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்துள்ளது?
அ. 5 கோடி
ஆ. 4 கோடி
இ. 3 கோடி
ஈ. 2 கோடி
6. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு, சுதந்திர தருணத்தில், ஆட்சி அதிகாரத்தின் அடையாளமாக, திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட பொருள் என்ன?
அ. வாள்
ஆ. கேடயம்
இ. பரிசு
ஈ. செங்கோல்
7. உலக ஈட்டி எறிதல் போட்டி தரவரிசைப் பட்டியலில், 'நம்பர் -1' இடத்தைப் பிடித்துள்ள இந்திய வீரர்?
அ. சிவ்பால் சிங்
ஆ. நீரஜ் சோப்ரா
இ. அன்னு ராணி
ஈ. சுமித் அன்டில்
8. அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகளப் போட்டிக்கான 3000 மீ. 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை?
அ. ஷிவானி சிங்
ஆ. ரித்து ஷர்மா
இ. பருல் செளத்ரி
ஈ. சுனில் பாட்டியா
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. அ, 4. ஈ, 5. ஆ, 6. ஈ, 7. ஆ, 8. இ.