நிகோபார் புறாக்கள்
வண்ணமயமாக இருக்கும்.
உண்மை. பொதுவாக, புறாக்கள் சாம்பல், வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், நிகோபார் புறாக்கள், நீலம், மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு நிற இறகுகள் கொண்டிருக்கும். இவற்றின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். அறிவியல் பெயர் கலோனஸ் நிகோபாரிகா (Caloenas nicobarica). இவற்றின் அலகுகள் முன் நோக்கி கூர்மையாக வளைந்திருக்கும். மனிதர்களால் சுத்தியல் கொண்டு மட்டுமே உடைக்க முடிந்த கொட்டைகளைக்கூட, தன் அலகாலே இப்புறா உடைத்துவிடும்.
பெர்சிய லில்லி செடி கறுப்பு நிறத்தில் பூக்கும்.
தவறு. ஈரான், இஸ்ரேல், சிரியா, துருக்கி, ஜோர்டான் ஆகிய நாடுகளில் காணப்படும் பெர்சிய லில்லி, உண்மையில் அடர் பழுப்பு நிறத்தில் பூக்கும். 2 -- 3 அடி உயரமே வளரும் இத்தாவரத்தின் பூக்கள், மணிகள் தொங்குவது போல் கீழ் நோக்கிப் பூக்கும். பெரும்பாலும், அலங்காரத்திற்காகத் தோட்டங்களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. லேசான அமிலத்தன்மை கொண்ட நிலத்தில் நன்றாக வளரும் இத்தாவரம், ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை உடையது.