நீரைப் பிரிப்பது எப்படி?
உங்களிடம் 7, 4, 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று குடுவைகள் உள்ளன. 7 லிட்டர் கொள்ளளவு குடுவையில் மட்டும் நீர் நிரம்பியுள்ளது. அதிலுள்ள நீரை முறையே 2, 2, 3 லிட்டர் குடுவைகளில் பிரிக்க வேண்டும். குறைந்தபட்சம் எத்தனை முறைகளில் இது சாத்தியம்?
விடைகள்:
ஆறு முறை.
1. முதலில், 7 லிட்டர் கொள்ளளவு குடுவையில் உள்ள நீரை
4 லிட்டர் கொள்ளளவு குடுவையில் ஊற்றலாம்.
2. பின், 4 லிட்டர் கொள்ளளவு குடுவையில் உள்ள நீரை
3 லிட்டர் கொள்ளளவு குடுவையில் ஊற்றலாம். இப்போது 3, 1, 3 அளவுகளில், நீர், குடுவைகளில் இருக்கும்.
3. 3 லிட்டர் கொள்ளளவு குடுவையில் உள்ள நீர் முழுவதையும் 7 லிட்டர் கொள்ளளவு குடுவையில் ஊற்றலாம். (6, 1, 0)
4. பின், 4 லிட்டர் கொள்ளளவு குடுவையில் இருக்கும் 1 லிட்டர் நீரை 3 லிட்டர் கொள்ளளவு குடுவையில் ஊற்றினால் 6, 0, 1 அளவுகளில், குடுவைகளில் நீர் இருக்கும்.
5. 7 லிட்டர் கொள்ளளவு குடுவையில் உள்ள நீரை
4 லிட்டர் கொள்ளளவு குடுவையில் ஊற்றினால் 2, 4, 1 அளவுகளில், குடுவைகளில் நீர் இருக்கும்.
6. பின், 4 லிட்டர் கொள்ளளவு குடுவையில் உள்ள நீரை 3 லிட்டர் கொள்ளளவு குடுவை நிரம்பும் வரை ஊற்றினால், அதில் ஏற்கெனவே இருக்கும் 1 லிட்டரையும் சேர்த்து, 3 லிட்டர் கிடைக்கும். அதனால் 4 லிட்டர் குடுவையில், 2 லிட்டர் மட்டுமே மீதம் இருக்கும். ஆக, நமக்குத் தேவையான 2, 2, 3 லிட்டர் கிடைத்துவிடும். பொறுமையாகச் செய்து பாருங்கள்!