பகுதிநேர பி.இ., படிப்பு | Kalvimalar - News

பகுதிநேர பி.இ., படிப்பு

எழுத்தின் அளவு :

பணிபுரியும் இளைஞர்களும் இன்ஜினியரிங் படிக்க உதவும் வகையில், பகுதிநேர பி.இ., படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.



வளாகங்கள்: இந்த சுயநிதி படிப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கிண்டி மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய இரண்டு வளாகங்களில் வழங்கப்படுகிறது.




துறைகள்:


காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கிண்டியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய மூன்று படிப்புகளும், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும் வழங்கப்படுகிறது.



படிப்பு காலம்: 7 செமஸ்டர்களுடன் மூன்றரை ஆண்டுகள்.



வகுப்பு நேரம்: வார வேலை நாட்களில் மாலை 6.15 முதல் 9.15 மணிவரை வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும்.



தகுதிகள்: ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் பெறப்பட்ட மூன்று ஆண்டு டிப்ளமா படிப்பு. மேலும், துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமா முடித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிற்குள் தமிழகத்தில் பணிபுரிபவராக இருத்தல் வேண்டும். போதிய உடல் தகுதி பெற்றிருப்பதும் அவசியம்.



வயது வரம்பு: பி.இ., பகுதிநேர படிப்பில் சேர உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.



விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள், https://admissions.annauniv.edu/ptbeapp2021/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான கல்வி சான்றிதழ்களுடன், தற்போது பணிபுரிவதற்கான ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். 



சேர்க்கை முறை: விண்ணப்பிக்கும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி, மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலான கலந்தாய்வில் தகுதியான இடங்கள் ஒதுக்கப்படும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24



விபரங்களுக்கு: https://admissions.annauniv.edu/cfa



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us