செக் குடியரசின் உதவித்தொகை | Kalvimalar - News

செக் குடியரசின் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

செக் குடியரசு மற்றும் இந்தியா அரசு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செக் குடியரசு அரசாங்கம் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி இந்திய மாணவர்கள், செக் குடியரசு பல்கலைக்கழகங்களில் தங்கி உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்பு நிலைகள்:


இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை விபரம்:


* மொத்தம் மூன்று உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. செக் கல்வி நிறுவனங்களில் 10 மாதங்கள் வரை கல்வி அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பை பெற முடியும். அதற்கான கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. 


* பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் சுமார் 30,500 ரூபாயும், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு சுமார் 32,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.


* இவைதவிர, தள்ளுபடி கட்டணத்தில் தங்குமிடம் மற்றும் மூன்று நேரமும் உணவு வழங்கப்படும். 


* விசா கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


* எனினும், விமானக் கட்டணம் இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்காது.தேவையான ஆவணங்கள்:


* கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அழைப்புக் கடிதம்


* மாணவரது கல்வி விபரம் 


* வெளியிட்டுள்ள கட்டுரைகள் பட்டியல் 


* ஆய்வு/ஆராய்ச்சிக்கான விரிவான திட்டம்


* கல்வி மேற்பார்வையாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டு பரிந்துரை கடிதங்கள்


* கல்வி சான்று நகழ்கள்


* பாஸ்போர்ட் நகல்


* கலைத்துறை சார்ந்த மாணவர்கள் கலைப் பணியின் மாதிரி புகைப்படங்கள், இசை நிகழ்ச்சியின் வீடியோ/ஆடியோ பதிவு போன்றவை.விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வாயிலாக பதிவிறக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செக் குடியரசின் தூதரகம், 50-எம், நிதி மார்க், சாணக்யபுரி, புதுடில்லி -110021 என்ற முகவரிக்கு முழுவதும் ஆங்கிலத்தில் அணுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 15.விபரங்களுக்கு: https://www.mzv.cz/newdelhi/en/pr/education/scholarships.htmlAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us