ஆஸ்திரிய உதவித்தொகை | Kalvimalar - News

ஆஸ்திரிய உதவித்தொகை

எழுத்தின் அளவு :

ஆஸ்திரியாவில் குறுகியகால கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்பை பெற விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரிய அரசாங்கம் உதவித்தொகை வழங்குகிறது.திட்டம்: ஸ்காலர்ஷிப் பவுண்டேஷன் ஆப் தி ரிபப்ளிக் ஆப் ஆஸ்திரியாபடிப்பு நிலைகள்: 


இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்துறைகள்: 


நேச்சுரல் சயின்சஸ், டெக்னிக்கல் சயின்சஸ், ஹூமன் மெடிசின், ஹெல்த் சயின்சஸ், அக்ரிகல்ச்சுரல் சயின்சஸ், சோசியல் சயின்சஸ், ஹுமானிட்டீஸ், ஆர்ட்ஸ்உதவித்தொகை காலம்: ஒன்று முதல் நான்கு மாதங்கள் வரைஉதவித்தொகை விபரம்:  மாத உதவித்தொகையாக சுமார் 90 ஆயிரம் ரூபாய் மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு 17 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. தங்குமிடத்திற்கான செலவை ஈடுகட்டும் வகையில் மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவைதவிர, போக்குவரத்து செலவினங்களுக்கும் இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.தகுதிகள்: மாணவர்களது டிப்ளமா, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பிற்கான ஆய்வுக்கட்டுரை அல்லது ஆய்வரிக்கைக்காக வழங்கப்படும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஆஸ்திரிய நாட்டில் கடந்த 6 மாத காலத்தில் கல்வி பெற்றிருக்கக் கூடாது; வேலையும் செய்திருக்கக் கூடாது. ஆராய்ச்சி மாணவர்கள் 40 வயதிற்கு மிகாமலும், இதர மாணவர்கள் 35 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியான மாணவர்கள் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: மாணவர்களது ஆராய்ச்சி தளங்கள், ஆஸ்திரியாவில் ஆய்வு மேற்கொள்வதற்கான அவசியம், ஆஸ்திரியாவில் தங்குவதற்கான பிரதான நோக்கம், மாணவரது கல்வி பின்புலங்கள் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 1, 2022விபரங்களுக்கு: www.scholarships.atAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us