ஐரோப்பிய உதவித்தொகை | Kalvimalar - News

ஐரோப்பிய உதவித்தொகை

எழுத்தின் அளவு :

மெட்டீரியல் சயின்ஸ் சார்ந்த துறைகளில் முதுநிலை படிப்புகளுக்கான வாய்ப்புகளை சர்வதேச அளவில் விரிவாக்கும் படிப்பு, ’மமாசெல்ப் பிளஸ்’ !முக்கியத்துவம்: ஐரோப்பிய உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், மூன்றாம் நாடுகளுடனான இணக்கம் வாயிலாக கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ’எராஸ்மஸ் முண்டஸ்’ திட்டத்தில் உதவித்தொகையுடன் இப்படிப்பு வழங்கப்படுகிறது.இதன்வாயிலாக, மெட்டீரியல் சயின்ஸ், பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி ஆகிய பிரிவுகளில் 2 அல்லது 3 பல்கலைக்கழகங்களில் இரட்டை முதுநிலைப் பட்டப்படிப்பை பெற முடியும்.படிப்பு காலம்: 2 ஆண்டுகள்தகுதிகள்: மெட்டீரியல் சயின்ஸ் அல்லது அது சார்ந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், ஜியோ-சயின்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு. மேலும், டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., கேம்பிரிட்ஜ் இ.எஸ்.ஓ.எல்., போன்ற சர்வதேச ஆங்கில மொழிப்புலமை தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.பங்குபெறும் முக்கிய பல்கலைக்கழகங்கள்:ரென்ஸ் பல்கலைக்கழகம் 1, பிரான்ஸ்


மாண்ட்பெல்லியர் பல்கலைக்கழகம், பிரான்ஸ்


டெக்னிஷ் பல்கலைக்கழகம் முன்சென், ஜெர்மனி


லுட்விக் மாக்சிமிலியன் பல்கலைக்கழகம், ஜெர்மனி


டொரினோ பல்கலைக்கழகம், இத்தாலி,


ஆடம் மிக்கிவிச் பல்கலைக்கழகம், போலந்துஉதவித்தொகை: அதிகபட்சம் 43 ஆயிரம் யூரோக்கள். இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய். போக்குவரத்து, இருப்பிடம், கல்விக்கட்டணம் ஆகிய செலவினங்கள் இதில் அடங்கும். விண்ணப்பிக்கும் முறை: http://application.mamaself.eu எனும் இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 10, 2022விபரங்களுக்கு: www.mamaself.euAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us