ஆராய்ச்சி படிப்புகள் | Kalvimalar - News

ஆராய்ச்சி படிப்புகள்

எழுத்தின் அளவு :

* 2021-22ம் கல்வி ஆண்டில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 


படிப்புகள்: எம்.பில்., மற்றும் பிஎச்.டி., - பகுதிநேர / முழுநேர படிப்புகள்


கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழக துறைகள், அங்கீகரிப்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 25


விபரங்களுக்கு: https://b-u.ac.in/



*ஆந்திர மாநிலம் சித்தூரில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஸ்ரீசிட்டி கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


துறைகள்: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் - பகுதிநேர / முழுநேர படிப்புகள்


தகுதிகள்: துறை சார்ந்த பிரிவுகளில் எம்.இ., அல்லது எம்.டெக்., பட்டம் மற்றும் அதே துறைகளில் பி.இ., அல்லது பி.டெக்., படித்திருப்பதும் அவசியம். துறை சார்ந்த பி.இ., அல்லது பி.டெக்., பட்டம் பெற்றவர்கள் நேரடி பிஎச்.டி., படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம்.


பகுதிநேர பிஎச்.டி., படிப்பிற்கு, தற்போது பணிபுரியும் ஐ.டி., ஊழியர்கள் அல்லது டி.ஆர்.டி.ஓ., ஐ.எஸ்.ஆர்.ஓ., போன்ற இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானியாக பணிபுரிபவரகள் விண்ண்ப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 27


விபரங்களுக்கு: www.iiits.ac.in



* கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் ராஜீவ்காந்தி சென்டர் பார் பயோடெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


தகுதிகள்: லைப், அக்ரிகல்ச்சர்,  என்விரான்மெண்ட்டல், பார்மாசூட்டிக்கல், மெடிக்கல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அறிவியல் பிரிவில் அல்லது பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேட்டிக்ஸ், பயோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


மேலும், மத்திய அரசின் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஜே.ஆர்.எப்., பெல்லோஷிப் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 10


விபரங்களுக்கு: https://rgcb.res.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us