புட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன? | Kalvimalar - News

புட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன?ஏப்ரல் 17,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ரெடிமேட் உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட ஜூஸ்கள் என இன்று உணவு தொழில்நுட்பம் எவ்வளவு அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதை அறிவோம். இதில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் முடிப்பவருக்கு பின்வரும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

உற்பத்தி மேலாளர் (புரடக்ஷன் மேனேஜர்): உணவுப் பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை தயார் செய்வது, பதப்படுத்துவது மற்றும் பேக்கேஜிங் செய்வது போன்ற பணிகளை உற்பத்தி மேலாளர் தான் செய்ய வேண்டும்.

குவாலிடி அஸ்யூரன்ஸ் மேனேஜர்: உணவு தயாரிப்பதற்கான உயர்ந்த தரமான மூலப் பொருட்களை தயார் செய்வது, உணவு தயார் செய்வதற்கான உபகரணங்களை நல்ல தரத்தில் பராமரிப்பது மற்றும் வாசனையை உறுதி செய்வது மற்றும் உணவை அலங்கரிப்பது போன்ற பணிகளை தர மேலாளர் செய்ய வேண்டும்.

புட் பேக்கேஜிங் மேனேஜர்: குறிப்பிட்ட உணவு எத்தனை நாள் கெடாமல் இருக்கும், அதில் உள்ள மூலப் பொருட்களின் தன்மையை அறிந்து அதை பேக்கிங் செய்வது போன்ற பணிகள் இவரோடு சம்பந்தப்பட்டது.

புராடக்ட் டெவலப்மென்ட் மேனேஜர்: வாடிக்கையாளர் மற்றும் நுகர்வோரின் ருசி அறிந்து புது ரக உணவுப் பொருட்களை தயார் செய்வது மற்றும் அவ்வப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உணவு தயார் செய்வதை மாற்றி அமைப்பது போன்ற பணிகளை பொருள் உருவாக்க மேலாளர் மேற்கொள்கிறார்.

லேபாரட்டரி சூப்பர்வைசர்: உணவை வேதியியல் பகுப்பாய்வு செய்து மைக்ரோ ஆர்கனிசம் இல்லாமல் பாதுகாக்கும் பணிகளை இவர் மேற்கொள்கிறார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us