எம்.டி., சித்தா | Kalvimalar - News

எம்.டி., சித்தா

எழுத்தின் அளவு :

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், எம்.டி., சித்தா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பாளையங்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் 2021 - 22ம் கல்வி ஆண்டிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தகுதிகள்: பி.எஸ்.எம்.எஸ்., மற்றும் ஏ.ஐ.ஏ.பி.ஜி.இ.டி., 2021- சித்தா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முற்றிலும் மெரிட் அடிப்படையில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும். 


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் வாயிலாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 25


விபரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us